Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

டுபாயில் கைதான 3 குற்றவாளிகள் நாடு திரும்பினர்: அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இதோ!

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2025 • 7:39 AM

டுபாயில் கைதான 3 குற்றவாளிகள் நாடு திரும்பினர்: அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இதோ!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வந்த மூன்று சந்தேகநபர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  • ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா 42 வயது முகவரி - புவக்கஹா தோட்டம், மாகந்த, உரகஸ்மங்ஹந்திய.
  • பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலியத்த - வலஸ்முல்ல வீதியில் உள்ள கஹவத்த பகுதியில், 22.01.2024 அன்று டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக, தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • சந்தன என்று அழைக்கப்படும் கந்தகம, தெனியே கெதர பிரதீப் சந்தருவன், 40 வய து முகவரி - ஸ்ரீ ஆனந்தராம மாவத்தை, கொலன்னாவ.
எழுத்து அளவு:

வந்த மூன்று சந்தேகநபர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர். 

குறித்த மூன்று சந்தேகநபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த விவரங்களையும் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

 

ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா

42 வயது

முகவரி - புவக்கஹா தோட்டம், மாகந்த, உரகஸ்மங்ஹந்திய.

பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலியத்த - வலஸ்முல்ல வீதியில் உள்ள கஹவத்த பகுதியில், 22.01.2024 அன்று டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக, தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சந்தன என்று அழைக்கப்படும் கந்தகம, தெனியே கெதர பிரதீப் சந்தருவன்,

40 வயது

முகவரி - ஸ்ரீ ஆனந்தராம மாவத்தை, கொலன்னாவ.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் 18.06.2023 அன்று துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்படும் சந்தேகநபருக்கு, அளுத்கடை எண் 02 நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

02.01.31 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை காயப்படுத்தி கொலை முயற்சி.

2021.06.30 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார்.

2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

2023.02.15 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.

 

ரொட்டும்ப உபாலி என்றழைக்கப்படும் நாடகந்தகே உபாலி

39 வயது

முகவரி – புவக்வத்த, தென்கந்தலிய.

அவர் 2008 ஒக்டோபர் 1ஆம் திகதியன்று, அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேகநபராவார். மேலும், மாத்தறை மேல் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16.04.2008 அன்று, மாவரல பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக உள்ளார். மேலும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஊருபொக்க பொலிஸ் பிரிவில் சட்டப்பூர்வ காவலில் இருந்து 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...