Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மாவையின் மகனிடம் பொலிஸ் விசாரணை

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2025 • 4:24 AM

மாவையின் மகனிடம் பொலிஸ் விசாரணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
  • இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலையமுதன் சேனாதிராஜா, “அரசடிச் சந்தியிலும் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது.
  • மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. குறித்த பதாகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
எழுத்து அளவு:

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 

குறித்த பதாகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலையமுதன் சேனாதிராஜா, “அரசடிச் சந்தியிலும் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. மற்றும் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. இரண்டையும் நானே எமது ஆதரவாளர்கள் ஊடாக அப்புறப்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காட்சிப்படுத்தப்பட்ட அந்த பதாகையில் மாவையின் மரணத்துக்குக் காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...