Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

செம்மணியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி: பூர்வாங்க ஆய்வுகளில் கண்டுபிடிப்பு!

T

The Leader Desk

ஜூன் 6, 2025 • 2:49 AM

செம்மணியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி: பூர்வாங்க ஆய்வுகளில் கண்டுபிடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடத்துக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி இருப்பதாக அஞ்சப்படுகின்றது.
  • இதேவேளை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை வரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
  • மேற்படி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக 4ஆவது நாளாக நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எழுத்து அளவு:

இடத்துக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி இருப்பதாக அஞ்சப்படுகின்றது.

தற்போதைய பூர்வாங்க ஆய்வுகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

எனவே, அந்தப் பகுதியை முழுமையாக மனிதப் புதைகுழி காணப்படும் பிரதேசமாகப் பிரகடனப்படுத்துமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இதனால் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பல நூறு பேர் ஒரே காலகட்டத்தில் தொகுதி, தொகுதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலத்தின் கீழ் ஸ்கான் செய்யப்பட்டு அவற்றின் மாதிரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை வரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக  வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக 4ஆவது நாளாக நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.

இந்த மனிதப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள் எனக் காணப்படுவதனால் அவை குடும்பங்களாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, இதனை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிவான் கட்டளை பிறப்பிக்கவுள்ளார்.

முன்னதாக, மூன்றுக்கு மேற்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டமையால் இதனை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்கள் - அறிக்கைகளை வெள்ளிக்கிழமை (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, இன்றைய தினம் மனிதப் புதைகுழியாக அறிவிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

-காலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

செம்மணியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி: பூர்வாங்க ஆய்வுகளில் கண்டுபிடிப்பு! | Tamil Leader | We Lead the Nation