Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஒரே வாகனத்தில் ஒன்றாக அநுராதபுரத்துக்கு புறப்பட்ட அநுர - மோடி!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2025 • 4:26 AM

ஒரே வாகனத்தில் ஒன்றாக அநுராதபுரத்துக்கு புறப்பட்ட அநுர - மோடி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.
  • புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறக்கப்படவுள்ளது.
  • அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
  • ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.
எழுத்து அளவு:

மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

இதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஒரே வாகனத்தில் ஒன்றாகப் பயணித்துள்ளனர்.

இது பற்றி தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “எனது நண்பர் அநுரகுமார திசாநாயக்கவுடன் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹாவ - அநுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.

இந்த வீதிகள் மூடப்படும் போது, ​​மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...