Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ட்ரம்பு, எலான் மஸ்க்குக்கு எதிராக போராட்டம்: அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2025 • 3:52 AM

ட்ரம்பு, எலான் மஸ்க்குக்கு எதிராக போராட்டம்: அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • ஹான்ட்ஸ் ஒஃப் என்ற குறித்த எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளில் இடம்பெற்றுள்ளன.
எழுத்து அளவு:

எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹான்ட்ஸ் ஒஃப் என்ற குறித்த எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த போராட்ட பேரணியில் உலகெங்கிலும் உள்ள, அதாவது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும் உள்ளூர் ஆதரவாளர்களும் பெர்லின், பிராங்பேர்ட், பாரிஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று என சர்வதேச ஊடகமான அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியதிலிருந்து நாங்கள் கண்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிப்பதுடன், பல்வேறு வயதினரை உள்ளடக்கிய போராட்டக்காரர்களின் மாறுபட்ட அமைப்பையும் வெளிப்படுத்துவதாக அவை சுட்டிக்காட்டுகின்றன.

அதேவேளை, இது உடனடி மாற்றத்திற்கு வழிவகுக்கப் போவதில்லை என்று போராட்ட அமைப்பாளர்கள் கூறி வருகின்றனர், ஆனால் டொனால்ட் டிரம்ப் எதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்பதை பல அமெரிக்கர்கள் எதிர்க்கிறார்கள் என்பதைக் காட்ட இது ஒரு முக்கியமான தருணம் எனவும் கூறப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...