Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘அதிகார பகிர்வு தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2025 • 4:08 AM

‘அதிகார பகிர்வு தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
  • “தேர்தலை தாமதிக்க அரசாங்கம் சட்டமா அதிபரை பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
  • கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் முறையாக பகிரப்படாமல், அது வெறும் 'வெள்ளை யானை' என சித்தரிக்கப்படுவது நியாயமானதல்ல.

“வடகிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோன்றும் என்ற பெயரில் மாகாண அதிகாரங்களை மறுக்கும் நிலை தவறானது என்றும், இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும்.

“அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது நியாயமற்றது. மூன்று தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“தேர்தலை தாமதிக்க அரசாங்கம் சட்டமா அதிபரை பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மாகாணங்களுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி விசேட அவதானம் செலுத்தப்படுகிறது.

“அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கினால் அது அரசியல்மயப்படுத்தப்படும் என்பது உறுதி. எனவே, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கண்காணிக்க தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் காணி ஆணைக்குழு ஊடாக விசேட வழிமுறையை செயற்படுத்த வேண்டும்.

“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முடியுமாயின் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமன அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...