Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள்; சர்வதேசக் கண்காணிப்பில் அகழ்வு மேற்கொள்ளுமாறு இன்று போராட்டம்!

T

The Leader Desk

ஜூன் 5, 2025 • 4:21 AM

செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள்; சர்வதேசக் கண்காணிப்பில் அகழ்வு மேற்கொள்ளுமாறு இன்று போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
  • செம்மணிச் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுள்ளது.
  • இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது.
எழுத்து அளவு:

செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது

நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது. இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணிச் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுள்ளது.

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி யோ.கலாரஞ்சினி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“காலத்துக்கு காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால்,  அவை அவ்வாறே கைவிடப்பட்டுள்ளன. எனவே, தற்போது யாழ். அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி சர்வதேசக் கண்காணிப் பின் கீழேயே அகழப்பட வேண்டும்." - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...