Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 05 மாணவர்களுக்கு மனஅழுத்தம்!

T

The Leader Desk

மே 5, 2025 • 1:27 PM

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 05 மாணவர்களுக்கு மனஅழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • இதற்கிடையே உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு சப்ரகமு பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதுடன், சகல மாணவர்களையும் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பகிடிவதை செய்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஐந்து மாணவிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக தாம் ஐவரும் கடுமையான மன அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகவும், தாம் வீடுகளுக்குப் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் குறித்த ஐந்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன

அதன் பிரகாரம் அவர்களுக்கான பயண ஏற்பாடுகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு சப்ரகமு பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதுடன், சகல மாணவர்களையும் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...