Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘பேரழிவுக்கு உள்ளாகிவரும் ஹொலிவூட்’; பிற நாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்!

T

The Leader Desk

மே 5, 2025 • 5:04 AM

‘பேரழிவுக்கு உள்ளாகிவரும் ஹொலிவூட்’; பிற நாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஞாயிற்றுக்கிழமை அவரது Truth Social தளம் வழியாக வெளியிடப்பட்ட இந்த முடிவு, “அமெரிக்க திரைப்படத் துறையைப் பாதுகாப்பதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
  • டிரம்ப்பின் புதிய வரி திரைப்படத்துறையில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
  • மேலும் 100 சதவீத வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணங்களும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஞாயிற்றுக்கிழமை அவரது Truth Social தளம் வழியாக வெளியிடப்பட்ட இந்த முடிவு, “அமெரிக்க திரைப்படத் துறையைப் பாதுகாப்பதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தயாரிப்பாளர்களும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் படங்களைத் தயாரிப்பதால் ஹொலிவூட் பேரிழப்பைச் சந்திக்கிறது. அதைச் சீராக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப், உலகின் பல நாடுகளுக்கு இதற்குமுன் பல்வேறு இறக்குமதி வரிகளை விதித்திருக்கிறார். உலகெங்கும் வரிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சீனத் தயாரிப்புகளுக்கு ஆக அதிகமாக வரி விதிக்கப்பட்டது.

இதற்கு, சீனாவும் பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்த அளவே அமெரிக்கத் திரைப்படங்களை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதாகச் சீன அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

டிரம்ப்பின் புதிய வரி திரைப்படத்துறையில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க திரைப்படத் துறை (ஹொலிவூட்) மிக வேகமாக பேரழிவிற்குள்ளாகி வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன.

“எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்த புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் ஏனைய நாடுகளின் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் 100 சதவீத வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணங்களும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...