Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்’: X பதிவில் மோடி நெகிழ்ச்சி!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2025 • 2:44 AM

‘கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்’: X பதிவில் மோடி நெகிழ்ச்சி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் சிங்களம் மற்றும் தமிழில் பதிவுகளை இட்டு வருகிறார்.
  • அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா, இன்று (05) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் சிங்களம் மற்றும் தமிழில் பதிவுகளை இட்டு வருகிறார்.

அதில், "நான் கொழும்பு வந்துவிட்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.

நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர்களான சரோஜா சாவித்ரி போல்ராஜ், கிருஷாந்த அபேசேன மற்றும் அனில் ஜெயந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், இலங்கை வாழ் இந்தியர்களும், பிரதமர் மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர். இது குறித்தும் பதிவொன்றை இட்டுள்ள பிரதமர், ‘கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலுமொரு பதிவில், “சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஸ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின் சில அத்தியாயங்கள்  ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது. இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள்” என்று. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில், தனது பதிவுகளை இட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்தியப் பிரதமர்.

இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்காவது இலங்கைப் பயணமாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இலங்கை வந்துள்ளார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து சென்ற பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா, இன்று (05) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Gntd7yeXAAABcpn.jpeg

 

Gntd6PnXEAAOmBH.jpeg

 

Screenshot_2025-04-05_073551.jpg

 

GnteB2rWoAA1LR4.jpeg

 

GnteG2DXMAAmt_J.jpeg

 

GnteKFhX0AA8WAL.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...