Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு குறைப்பை குழப்ப வேண்டாம்!

T

The Leader Desk

மார்ச் 5, 2025 • 3:22 AM

முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு குறைப்பை குழப்ப வேண்டாம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
  • சிவில் யுத்தம் நிலவிய போது இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலைவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
  • அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
எழுத்து அளவு:

விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இவை தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக எவரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இராணுவம் தொழிற்துறை நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படும். இராணுவமானது அரசுக்கு சார்பானதாக காணப்பட வேண்டுமே தவிர, ஜனாதிபதிக்கோ பாதுகாப்பு செயலாளருக்கோ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கோ சார்பாக செயற்படக் கூடாது, தேசிய பாதுகாப்பே முப்படைகளின் பணியாகும். அதற்கான தொழிற்துறையைப் பாதுகாக்க வேண்டும்.

சிவில் யுத்தம் நிலவிய போது இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலைவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

அதற்கமைய தொழிநுட்ப ரீதியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

மறுபுறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசணையும் இதில் உள்ளடங்கும். எனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை.

ஏதேனுமொரு பிரதேசத்தில் இராணுவ முகாம் நீக்கப்படும் போது, அல்லது பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்படும் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதற்கென குழுவொன்று உள்ளது.

விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே நாம் இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம் என்பதை அவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...