Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வேகமாக வாகனம் செலுத்தி இனி யாரும் தப்ப முடியாது!

T

The Leader Desk

மார்ச் 5, 2025 • 3:11 AM

வேகமாக வாகனம் செலுத்தி இனி யாரும் தப்ப முடியாது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
  • இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
  • போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவல, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "2020 முதல் 2024 வரை பார்த்தால், வீதி விபத்துக்கள் 11,617 நடந்துள்ளன.
  • கடுமையான விபத்துக்கள் 33,259 ஆக உள்ளன.
எழுத்து அளவு:

தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறை மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும். இதன் மூலம் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவல, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

"2020 முதல் 2024 வரை பார்த்தால், வீதி விபத்துக்கள் 11,617 நடந்துள்ளன. கடுமையான விபத்துக்கள் 33,259 ஆக உள்ளன. 12,322 பேர் இறந்துள்ளனர். 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி வரை 341 பேர் இறந்துள்ளனர். இவர்கள் ஆரோக்கியமான மனிதர்கள்.

"இந்த வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவே இந்த ஸ்பீடு கன் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக இருப்பது அதிக வேகம். இந்த புதிய ஸ்பீடு கன் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

"தொழில்நுட்ப ரீதியாக மிக உயர்ந்த வேக அளவீட்டு கருவி இது. இதை 'டூ கேம்' என்று சொல்கிறார்கள். இதில் நைட் விஷன் உள்ளது. 1.2 கிலோமீட்டர் தூரம் வரை இது செயல்படும். இந்த கருவியால் சாரதியின் புகைப்படம், வாகனத்தின் இலக்கம், வேகம் ஆகியவை பதிவாகின்றன. உடனடியாக அதை காட்ட முடியும். யாரும் மறுக்க முடியாது. இந்த வீடியோவை சாட்சியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

"இலங்கை முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 30 கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கருவியின் விலை 33 இலட்சம் ரூபாய். தற்போது 30 பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 15 கருவிகளை கொண்டுவர ஓர்டர் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 45 பிரிவுகளுக்கும் வழங்க முடியும்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...