Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை

T

The Leader Desk

பிப்ரவரி 5, 2025 • 12:06 PM

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
  • ரமழான் மாதம், 2025ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30ஆம் திகதி முடிவடைய உள்ளதால், இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
  • வரை பி.ப 03.15 முதல் பி.ப 04.15 வரை பி.ப 06.00 முதல் பி.ப 07.00 வரை பி.ப 07.30 முதல் பி.ப 10.30 வரை இக்காலத்தின் போது அவ் உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும்.
  • மேலும் ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையை திணைக்களம் அனுப்பியுள்ளது.

2025 ரமழான் காலத்தில் விசேட விடுமுறை தொடர்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரமழான் மாதம், 2025ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30ஆம் திகதி முடிவடைய உள்ளதால், இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மு.ப. 03.30 முதல் மு.ப. 06.00 வரை

பி.ப 03.15 முதல் பி.ப 04.15 வரை

பி.ப 06.00 முதல் பி.ப 07.00 வரை

பி.ப 07.30 முதல் பி.ப 10.30 வரை

இக்காலத்தின் போது அவ் உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். மேலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம்.

மேலும் ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை | Tamil Leader | We Lead the Nation