Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம்காண வருவோர் குறித்து நீதிமன்றம் அவதானம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2025 • 2:36 PM

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம்காண வருவோர் குறித்து நீதிமன்றம் அவதானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், புதைகுழியில் கண்டுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்த நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
  • இவ்வாறு மீட்கப்பட்ட பிற பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் நாளைய தினம் (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், முதற்கட்டமாக இவ்வாறான காட்சிப்படுத்தல் இடம்பெறுவதாக நீதிபதி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், புதைகுழியில் கண்டுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்த நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமது அலுவலகம் விடுத்த கோரிக்கை குறித்து நீதிமன்றம் அவதானம் செலுத்துமென யாழ்ப்பாண நீதவான் கூறியதாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார்.

“வருபவர்களுக்கு நீர் ஆகாரங்கள் மற்றும் உளவள ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சில வேளைகளில் சிலர் வந்து தங்களுடைய தொலைந்த உறவினர்களுடைய சான்று பொருட்களைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உளவள ஆலோசனை ஒன்று தேவைப்படும் பட்சத்தில் வைத்திய உதவிகள் தேவைப்படும் படசத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக கௌரவ நீதிபதி தெரிவித்தார்.”

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் மனித எலும்புகளுடன் குழந்தை பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்,  சிறுவர் காலணிகள் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு மீட்கப்பட்ட  பிற பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் நாளைய தினம் (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் தகவல் பகிரப்பட்டிருக்கலாம் என தமது அலுவலகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார். 

“பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சமர்ப்பித்தோம். எனினும், முதற்கட்டமாக இவ்வாறான காட்சிப்படுத்தல் இடம்பெறுவதாக நீதிபதி தெரிவித்தார். 45 நாட்கள் அகழ்வாய்வுக்கு பின்னர் கண்டெடுக்கப்படும் அனைத்து பிற பொருட்களும் காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில் பொது மக்களை சென்றடையும் வகையில், முறையான விதத்தில் தகவல்கள் பகிரப்படும் என நீதிபதி அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு கூறப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாக சட்டத்தரணி பூரணி மேலும் கூறினார்.

"பொது மக்கள் அதிகம் வந்துபோகக்கூடிய இடத்தில் இந்த காட்சிபடுத்தல் நடைபெற்றிருந்தால் சிறந்ததாக இருக்கும் என பிரேரணையில் சமர்ப்பித்தோம். அத்துடன் சான்று பொருட்களாக எடுக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு மேலதிகமாக குறித்த பொருட்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.”

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு காட்சிப்படுத்தும்போது, மேலதிகமாக பெண் அதிகாரிகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

"மேலும், தமிழ் பேசக்கூடிய உத்தியோகத்தர்கள், தமிழ் பேசக்கூடிய குறித்த விடயபரப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் அந்த இடத்தில் காணப்படும் பட்சத்தில், வந்து பார்க்கின்ற நபர்களுக்கு, வருகின்றவர்களுக்கு மேலதிக உதவியாக இருக்குமென நாங்கள் பிரேரணை சமர்ப்பித்துள்ளோம்."

மீட்கப்பட்ட பிற பொருட்கள் காட்சிப்படுத்தலின்போது பங்கேற்கும் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடிக்க, ஒளிப்பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம்காண வருவோர் குறித்து நீதிமன்றம் அவதானம்! | Tamil Leader | We Lead the Nation