Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான மனுக்கள் தள்ளுபடி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2025 • 2:33 PM

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான மனுக்கள் தள்ளுபடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடையில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று (04) விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.
  • மேலும், தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக 2 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.
  • நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இடையில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று (04) விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு,  உயர் நீதிமன்ற நீதியரசர்களான  அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி  குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவில் சட்டமா அதிபர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை  உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்துக்கு முரணானவை என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும்,  இது அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அதில் கையெழுத்திடுவது சட்ட மீறலாகும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கவும், தொடர்புடைய ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கவும் கோரியுள்ளனர். மேலும், தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக 2 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...