Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

குச்சவெளி துப்பாக்கிச்சூடு: அமைச்சர் சந்திரசேகரன் அதிரடி நடவடிக்கை!

T

The Leader Desk

ஜூன் 4, 2025 • 9:57 AM

குச்சவெளி துப்பாக்கிச்சூடு: அமைச்சர் சந்திரசேகரன் அதிரடி நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கடற்படையினருக்கு மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
  • ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கடற்படையினருக்கு மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் என்பதோடு, அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்றும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அமைச்சரால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

“சட்டவிரோத மீன்பிடி முறையானது, கடலுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

“சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...