Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பகிடிவதை பைத்தியங்களால் பலியாகும் எதிர்காலம்!

T

The Leader Desk

ஜூன் 4, 2025 • 2:50 AM

பகிடிவதை பைத்தியங்களால் பலியாகும் எதிர்காலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
  • குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் புதிய மாணவி ஒருவர் அதன் அருகிலுள்ள குளத்தில் குதித்த சம்பவம் நேற்று முன்தினம் (02) மாலை பதிவாகியிருந்தது.
  • சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், அதில் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் தான் தாங்க முடியாத துன்பங்களுக்கு ஆளானதாகக் அவர் கூறியுள்ளார்.
  • பகிடிவதை சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் இன்றைய தினம் (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் புதிய மாணவி ஒருவர் அதன் அருகிலுள்ள குளத்தில் குதித்த சம்பவம் நேற்று முன்தினம் (02) மாலை பதிவாகியிருந்தது.

இதன்போது மாணவியை மீட்க பிரதேசவாசிகள் உடனடி நடவடிக்கை எடுத்த போது அதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

பின்னர் மாணவி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், அதில் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் தான் தாங்க முடியாத துன்பங்களுக்கு ஆளானதாகக் அவர் கூறியுள்ளார்.

தாம் சொல்ல முடியாத சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும் பொலிஸாரிடம் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பின்னர் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர், சந்தன அபயாலாலிடம் இது குறித்து வினவிய போது, சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரி மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இத்தகைய சூழலில், மாணவியை பகிடிவதை செய்ததாக கூறப்படும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று சிரேஸ்ட மாணவர்களும், மாணவி ஒருவரும் நேற்று குளியாப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பகிடிவதை சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் இன்றைய தினம் (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...