Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

IMF இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம்!

T

The Leader Desk

மே 4, 2025 • 4:14 AM

IMF இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறியமை சிக்கலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐந்தாவது தவணையான 344 மில்லியன் டொலர் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  • எனினும் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அந்தத் தொகையை வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும்.
எழுத்து அளவு:

மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறியமை சிக்கலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐந்தாவது தவணையான 344 மில்லியன் டொலர் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அந்தத் தொகையை வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும்.

மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், 344 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெறுவதற்கு நேரம் எடுக்கும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடும் ஆபத்தில் உள்ளது என அவர் கூறினார்.

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சமீபத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தும் போது, ​​ஜூன் மாதத்திற்குள் மின்சார கட்டண விடயங்களில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், பொருத்தமான முறையில் முன்னேறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...