Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

15 வயது பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சக மாணவர்கள் எழுவர் கைது!

T

The Leader Desk

ஏப்ரல் 4, 2025 • 5:56 AM

15 வயது பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சக மாணவர்கள் எழுவர் கைது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று கூறப்படும் பாடசாலை மாணவன், மேலும் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேரை, ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • அப்போது, ​​சந்தேகநபரான காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
  • அவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும் ஏனைய இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

என்று கூறப்படும் பாடசாலை மாணவன், மேலும் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேரை, ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் இந்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கூட்டு வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவி, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டியூஷன் வகுப்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டே, மேற்படி மாணவி தனது காதலன் என்று கூறிக்கொண்ட மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, ​​சந்தேகநபரான காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவ தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள், வேறு மூன்று வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதென்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

அவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும் ஏனைய இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள், மேற்படி பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...