Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வைத்தியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

T

The Leader Desk

மார்ச் 4, 2025 • 2:40 PM

வைத்தியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.
  • இந் நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
  • முன்னதாக, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (05) முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
எழுத்து அளவு:

தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக்குக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த வேதன அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி  செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (05) முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், மருத்துவர்களின் கூடுதல் பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வெட்டுக்கள் குறித்து விவாதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அவசர மத்திய குழுவைக் கூட்டியபோதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார நிபுணர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைக்குரிய சூழ்நிலையை தீர்க்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 6ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாட்டின் முதல் 10 சம்பள விகிதங்களில் ஆசிரியர் அதிபர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், உதவி மருத்துவ நிபுணர்களை அதிலிருந்து விலக்கியதன் மூலம் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...