Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் NGOக்களை விசாரிக்குமாறு நாமல் கோரிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2025 • 3:32 PM

அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் NGOக்களை விசாரிக்குமாறு நாமல் கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • தனது "X" தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
  • அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது "X" தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க தனது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை, எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று நாமல் ராஜபக்ஷ அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் NGOக்களை விசாரிக்குமாறு நாமல் கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation