Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2025 • 6:42 AM

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில், வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன என்று, செய்திகள் வெளியாகியுள்ளன.
  • வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம்  கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப் போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள்,  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில், வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன என்று, செய்திகள் வெளியாகியுள்ளன.

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன்,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று, அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exif_JPEG_420

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...