Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

யாழில் சிவப்பு நிறமாக மாறியுள்ள குடிநீர்!

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2025 • 5:39 AM

யாழில் சிவப்பு நிறமாக மாறியுள்ள குடிநீர்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் தொடர்ந்து சிவப்பு நிற குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
  • மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரே இவ்வாறு சிவப்பு நிறமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ். மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரே இவ்வாறு சிவப்பு நிறமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நீரை அருந்தவே முடியாது எனவும், ஏனைய சலவை நடவடிக்கைகளுக்கும், சமையலுக்குக் கூட இதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் யாழ்ப்பாண மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாவனையாளர்கள் யாழ். மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் தொடர்ந்து சிவப்பு நிற குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் மாநகர ஆணையாளரிடம் வினவிய போது, யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் அமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை சரிசெய்வதற்காக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாதாள சாக்கடையில் செம்மண் குவிந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மூன்று நாட்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...