Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

செம்மணியில் சிறுவர், பெண்களின் அதிகளவு எலும்புக்கூடுகள்: அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்!

T

The Leader Desk

ஜூன் 3, 2025 • 4:44 AM

செம்மணியில் சிறுவர், பெண்களின் அதிகளவு எலும்புக்கூடுகள்: அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
  • இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.
  • இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
எழுத்து அளவு:

அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.

அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.

இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வேறு இடங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இங்கு எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அதற்குச் சான்றாகப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஓர் ஒழுங்கு முறையாகவோ அல்லது சாதாரணமாகவோ காணப்படவில்லை. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களை அண்டிய காலப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு அடையாளம் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

-முரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...