Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்தியாவுக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றவர்கள் இலங்கை திரும்புவதற்கான தடைகள் நீக்கம்!

T

The Leader Desk

ஜூன் 3, 2025 • 4:06 AM

இந்தியாவுக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றவர்கள் இலங்கை திரும்புவதற்கான தடைகள் நீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அகதிகளாக தங்கியிருந்த மக்கள், மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு இருக்கும் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  • அது தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • அவர்கள், மே 2023இல் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் என்று, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

அகதிகளாக தங்கியிருந்த மக்கள், மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு இருக்கும் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக, தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

போரின் போது, ​​வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர், பாதுகாப்புக்காக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று, தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

அmந்த மக்கள் இலங்கை திரும்புவதற்கு, தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அவற்றைத் திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அது தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் வழியாக நாட்டிற்கு வந்த ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேர் தலைமன்னார் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயது தம்பதியினரும் மூன்றரை வயது குழந்தையுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள், மே 2023இல் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் என்று, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...