Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இன்றிரவுடன் பிரசாரம் முடிவு: 43 வேட்பாளர்கள் கைது!

T

The Leader Desk

மே 3, 2025 • 12:49 PM

இன்றிரவுடன் பிரசாரம் முடிவு: 43 வேட்பாளர்கள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று 3 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை 4 ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸுக்குக் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 3 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை 4 ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 4 ஆம் திகதியன்று வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸுக்குக் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 43 வேட்பாளர்களும், 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 41 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...