Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பகிடிவதைக்கு எதிர்ப்பு: புனைப்பெயரும் இல்லாத ‘ஜபுர’ மாணவனுக்கு தலைக்கவசத் தாக்குதல்!

T

The Leader Desk

மே 3, 2025 • 3:19 AM

பகிடிவதைக்கு எதிர்ப்பு: புனைப்பெயரும் இல்லாத ‘ஜபுர’ மாணவனுக்கு தலைக்கவசத் தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார்.
  • சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
  • சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கற்று வந்த புசல்லாவை பிரதசத்தைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்சான் எனும் மாணவர் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்துக்கொண்டுள்ளார்.
எழுத்து அளவு:

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடியதும் இந்தத் தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய விசாரணைக்குழுவொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கற்று வந்த புசல்லாவை பிரதசத்தைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்சான் எனும் மாணவர் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்துக்கொண்டுள்ளார்.

பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனையடுத்து உயர்கல்வி அமைச்சு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்திருந்தது.

தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பிலும் அதன் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் தலைமையில் மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பகிடிவதைக்கு எதிர்ப்பு: புனைப்பெயரும் இல்லாத ‘ஜபுர’ மாணவனுக்கு தலைக்கவசத் தாக்குதல்! | Tamil Leader | We Lead the Nation