Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, நொடித்துப்போன இலங்கை மீது கைவரிசை காட்டிய ட்ரம்ப்!

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2025 • 2:42 PM

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, நொடித்துப்போன இலங்கை மீது கைவரிசை காட்டிய ட்ரம்ப்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அப்படியாக இருக்கின்றது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கைகள்.
  • அனை த்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத வரியை விதித்து இருக்கும் அமெரிக்கா, டசின் கணக்கான பிற நாடுகளுக்குப் பரஸ்பர வரியை அதிகரித்து இருக்கிறது.
  • இலங்கை தனது மொத்த ஏற்றுமதியில் கால்பங்கை - 25 வீதத்தை - அமெரிக்காவுக்குத்தான் அனுப்புகிறது.
  • புதிய வரி விதிப்பின்படி 49 சதவீதத்தில் கம்போடியா மிக உயர்ந்த வரியை எதிர்க்கொள்கிறது.
எழுத்து அளவு:

அப்படியாக இருக்கின்றது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கைகள்.

இதுவரை காலமும் அயல் நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் பெரிய நாடுகளோடு வரிவிதிப்பு யுத்தத்தைப் பிரகடனப்படுத்தி வந்த ட்ரம்ப் நிர்வாகம், இப்போது நொந்து நொடித்துப்போன இலங்கை போன்ற நாடுகள் மீதும் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.

இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா விடமிருந்து அதிக அளவில் இறக்குமதியை செய்யாத நாடுகளில் இருந்து தனது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதீத வரியை அறிவித்திருக்கிறது ட்ரம்பின் நிர்வாகம்.

அனை த்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத வரியை விதித்து இருக்கும் அமெரிக்கா, டசின் கணக்கான பிற நாடுகளுக்குப் பரஸ்பர வரியை அதிகரித்து இருக்கிறது. குறிப்பா க அமெரிக்காவுடனான வர்த்த கத்தில் அமெரிக்க பொருள்களை அதிகம் இறக்குமதி செய்யாமல், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கண்மூடித்தனமான வரி அதிகரிப்பை அமெரிக்க அறிவித்துள்ளது.

இலங்கை தனது மொத்த ஏற்றுமதியில் கால்பங்கை - 25 வீதத்தை - அமெரிக்காவுக்குத்தான் அனுப்புகிறது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள உயர்ந்த வரி விகிதங்களில் ஆறாவது இடத்தை இலங்கை எதிர்கொள்கின்றது.

புதிய வரி விதிப்பின்படி 49 சதவீதத்தில் கம்போடியா மிக உயர்ந்த வரியை எதிர்க்கொள்கிறது. அதைத் தொடர்ந்து வியட்நாம் 46 சதவீதத்திலும், இலங்கை 44 சதவீதத்திலும், சீனா 34 சதவீதத்திலும் உள்ளன. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை  அறிவித்திருக்கின்றார்.

எதிர்பாராதவிதமான இந்த அதிரடியான அதிக வரி விகிதங்கள் நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகள் பலவற்றையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. டிரம்ப் தமது இந்த நடவடிக்கையை பொருளாதார சுதந்திரத்தின் பிரகடனம்’ என்று விவரிக்கின்றார்.

அமெரிக்காவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியை சமன் செய்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக அவர் தமது இந்த அதிரடி நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கின்றார்.

இந்த விரிவான வரி விதிப்புகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புகின்றன எனவும், உலகளாவிய ஒழுங்கை வடிவமைத்த பல தசாப்தகால வர்த்தக தாராள மயமாக்கலை சிதறடிப்பனவாகவும் அமைந் துள்ளன என பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.

ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளினால் எழுந்துள்ள கவலைகள் ஏற்கனவே உலகெங்கிலும் உற்பத்தி நடவடிக்கைகளை மந்தப்படுத்தியுள்ள அதே நேரத்தில், விலைகள் உயரும் முன் பொருள்களை கொள்முதல் செய்ய நுகர்வோர் விரைவதால் அமெரிக்காவில் இறக்குமதி செ ய்யப்பட்ட பொருள்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

டரம்ப் அதிரடியாக - எதேச்சா திகாரமாக - அமெரிக்கத் தரப்புக்கே உரித்தான மேலாதிக்கக் கர்வத்தோடு – உலகின் மீது தொடுத்திருக்கும் இந்த வர்த்தகப் போர், நலிவுற்ற நாடுகளின் அப்பாவி நுகர்வோரைப் பெரிதும் பாதிக்கப்போகின்றது என்பதுதான் இதில் உள்ள பெரும் துன்பியல் துரதிர்ஷ்டமாகும்.

இந்த வரி விதிப்பு நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தை மெதுவாக்கும். மந்தநிலையின் அபாயத்தை அதிகரிக்கும். அதேச மயம் சராசரி அமெரிக்க குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளை ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகரிக்கச் செய்யும் என்றும் கூட பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்பின் திருக்கூத்தின் உள்நோக்கம் குறித்து சர்வதேசப் பொருளாதார நிபுணர்களே குழம்பி நிற்கின்றனர் என்பதுதான் இதில் உள்ள அடுத்த ஆச்சரியமாகும்.

-முரசு ஆசிரியர் தலைங்கம்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, நொடித்துப்போன இலங்கை மீது கைவரிசை காட்டிய ட்ரம்ப்! | Tamil Leader | We Lead the Nation