Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சுவார்த்தை!

T

The Leader Desk

மார்ச் 3, 2025 • 3:49 AM

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சுவார்த்தை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.
  • இருப்பினும் குறித்த நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத தள்ளுபடியை ரத்து செய்யும் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர். இந்தக் கலந்துரையாடல், இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் வழங்கப்படும் மூன்று சதவீத கழிவை இரத்து செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்தை அடுத்து, புதிய எரிபொருள் முன்பதிவுகளை முன்வைக்காதிருக்க இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இருப்பினும் குறித்த நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத கழிவை இரத்து செய்யவதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், எரிபொருள் விநியோகிக்கும் போது வங்கி மற்றும் கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு எரிபொருள் வழங்கப்படும் வாய்ப்பும் இழக்கப்படலாம் என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எரிபொருள் விநியோகஸ்தர்கள் பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தத் தயாராக இருந்தால், அரசாங்கம் அது குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத தள்ளுபடியை ரத்து செய்யும் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...