Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கையை யாரும் காப்பாற்ற முடியாது!’

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2025 • 2:27 AM

‘சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கையை யாரும் காப்பாற்ற முடியாது!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை அரசாங்கம் எந்த காலத்திலும் தான் செய்த குற்றங்களை விசாரிக்காது.
  • ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தை பலப்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
  • அதனால் தான், நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இலங்கை அரசாங்கம் எந்த காலத்திலும் தான் செய்த குற்றங்களை விசாரிக்காது. அதனால் தான், நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

எனினும், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தை கொண்டு செல்வதாயின் அது இன்னொரு நாட்டால் மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை போர்குற்றத்தில் ஈடுபட்டதாக இன்னொரு அரசாங்கம் குற்றம்சாட்டி இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க முடியும் என்றார்.

இதேவேளை, ஜெனிவா அமர்வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி கையொப்பமிடுமென எதிர்பார்ப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனினும், கடிதத்தின் இறுதி வடிவத்தில் கொள்கையளவில் சகலரும் கையொப்பமிட்டுள்ளதால் அவற்றை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் இணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தை பலப்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, தமிழ் தேசிய பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக சுமந்திரன், எஸ்.சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் சிவில் சமூகம் சார்பாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போது, அதில் கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டு, அக்கூட்டம் நிறைவடையும் போது, அது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு இணங்குவதாயின் அது தொடர்பில் நாளை மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்து தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ள கடிதத்தின் பொருளை மாற்றாமல், அவற்றை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை பரிசீலிக்க தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனினும், அவற்றில் உள்ள அம்சங்களை அகற்றுவதற்கு உடன்படவில்லை எனவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னர் கடிதத்தை வெளியிடுவதை தாமதிக்க முடியாது என்பதை எடுத்துக்கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கையை யாரும் காப்பாற்ற முடியாது!’ | Tamil Leader | We Lead the Nation