Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வெள்ளியன்று முதல் பஸ் கட்டணக் குறைப்பு!

T

The Leader Desk

ஜூலை 2, 2025 • 3:21 AM

வெள்ளியன்று  முதல் பஸ் கட்டணக் குறைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டுக்கான வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய 2.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
  • ஆயினும், எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின்படி நேற்று முன்தினம் (30) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபா வரை அதிகரித்துள்ளது.
  • இந்த விலைத் திருத்தத்துக்கிணங்க 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க முடியும்.
  • அதற்கமைய, பஸ் கட்டணத்தை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 0.55 சதவீதத்தால் குறைப்பதற்குப் போக்குவரத்து அமைச்சால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய 2.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின்படி நேற்று முன்தினம் (30) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்த விலைத் திருத்தத்துக்கிணங்க 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க முடியும். அதற்கமைய, பஸ் கட்டணத்தை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 0.55 சதவீதத்தால் குறைப்பதற்குப் போக்குவரத்து அமைச்சால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தில ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கீழ் இயங்கும் பஸ்கள், தேசிய போக்குவரத்துச் சபை அல்லது மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கும் தனியார் பஸ்கள் தற்போது நடைமுறையிலுள்ள கட்டணத்தை 0.55 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

-தமிழன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...