Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சிலி, அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

T

The Leader Desk

மே 2, 2025 • 2:06 PM

சிலி, அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.
  • அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரின் கடற்கரையிலிருந்து 219 கி.மீ (136 மைல்) தொலைவில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென்று, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர் உயரத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.

சிலி சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாட்டின் கரையோரப் பகுதியிலுள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சிலியின் தெற்கு முனையில் உள்ள தொலைதூர மக்கலன்ஸ் பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரின் கடற்கரையிலிருந்து 219 கி.மீ (136 மைல்) தொலைவில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென்று, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக், "மாகல்லன்ஸ் பகுதி முழுவதிலுமுள்ள கடற்கரையோர மக்களை வெளியேற்றுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று கோரியுள்ளார்.

இதேவேளை, சிலியின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம், குடியிருப்பாளர்கள் அமைதியாகச் செயல்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர் உயரத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

cdn_image.gif

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...