Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

காணி கபளீகர வர்த்தமானியை வாபஸ் அநுரவுக்கு காலக்கெடு!

T

The Leader Desk

மே 2, 2025 • 1:23 PM

காணி கபளீகர வர்த்தமானியை வாபஸ் அநுரவுக்கு காலக்கெடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது.
  • இதனை அரசு கை வாங்குவதற்கு ஒரு மாத காலக்கெடு - மே 28 வரை - வழங்குகின்றோம்.
  • ஒட்டுமொத்த முழுத் தமிழினமும், தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்ற போராட்டம்.
எழுத்து அளவு:

வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அரசு இந்த விடயத்தில் வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் அந்தத் திகதிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகள் யாவற்றையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்று அறிவித்திருக்கின்றார்.

'மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு கை வாங்குவதற்கு ஒரு மாத காலக்கெடு - மே 28 வரை - வழங்குகின்றோம். அந்தத் திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசு வாபஸ் வாங்காவிட்டால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ்ப் பொதுமக்களை இணைத்துக்கொண்டு அந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்' என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

'இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த முழுத் தமிழினமும், தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்ற போராட்டம். மூத்த முன்னணி - தமிழ்க் கட்சி என்ற முறையில் இந்த அறிவிப்பை அதன் பதில் பொதுச் செயலாளராக நான் அறிவித்திருக்கின்றேன்.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை, தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை வந்துள்ளது. தமிழினத்தின் கருத்தை இந்தப் போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம் முன்வைப்போம்'  என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

Land.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காணி கபளீகர வர்த்தமானியை வாபஸ் அநுரவுக்கு காலக்கெடு! | Tamil Leader | We Lead the Nation