Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

LTTEஇடமிருந்து கைப்பற்றப்பட் தங்கம் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு!

T

The Leader Desk

மே 2, 2025 • 12:58 PM

LTTEஇடமிருந்து கைப்பற்றப்பட் தங்கம் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு தொகை பொருட்கள், தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (2) இராணுவ தலைமையகத்தில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
  • அதன்படி, நகைகள் அடங்கிய 120 பொதிகள், இன்றைய தினம் (02) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பொருட்கள் அடங்கிய பொதிகள், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

ஒரு தொகை பொருட்கள், தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (2) இராணுவ தலைமையகத்தில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

போர் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்தும் அவ்வமைப்பின் வங்கிகளிடம் இருந்தும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட தங்கம், வெள்ளி, வைரங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே, இவ்வாறு விசாரணைகளின் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நகைகள் அடங்கிய 120 பொதிகள், இன்றைய தினம் (02) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பொருட்கள் அடங்கிய பொதிகள், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீப்த ஆரியசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் நவீன் சூரியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த தங்கப் பொருட்களின் மதிப்பு மற்றும் நிறை, ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கங்களின் அடையாளங்களை உறுதிசெய்த பிறகு, அவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்பக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...