Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மியன்மார் நிலநடுக்கம்: 108 மணி நேரத்துக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2025 • 3:28 PM

மியன்மார் நிலநடுக்கம்: 108 மணி நேரத்துக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நபரொருவர் மீட்கப்பட்டுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
  • நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • மேலும் மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.
  • இதற்கிடையே கடும் போராட்டத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நபரொருவர் மீட்கப்பட்டுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.

இதற்கிடையே கடும் போராட்டத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நைபிடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியறாக பணியாற்றி வந்தவர் நைங் லின் துன் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின்போது ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலருடன் அவரும் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இடிபாடுகளின் உள்ளே சிக்கியவர்களை கண்டறிய மீட்புக் குழுவினர் எண்டிஸ்கோபிக் கேமராவைப் பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

அவரை ஒரு தரைப்பகுதி வழியாக ஜாக் ஹாமர் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிட்டு மீட்டுள்ளனர்.

அவர் உள்ளே சிக்கி சுமார் 108 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு IV டிரிப் பொருத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Miy04.jpeg

 

Miy05.jpeg

 

Miy02.jpeg

 

Miy03.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...