Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

காணாமல்போன உறவுகளைத் தேடி மகளிர் தினத்தன்று மாபெரும் போராட்டம்!

T

The Leader Desk

மார்ச் 2, 2025 • 2:10 AM

காணாமல்போன உறவுகளைத் தேடி மகளிர் தினத்தன்று மாபெரும் போராட்டம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வரும் தாம், சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
  • அதனால், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவளித்து தமது உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தர அனைவரும் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:

தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வரும் தாம், சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கம் கூறியதாவது,

“கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தாம் 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்த போராட்டம் எதிர்வருகின்ற மார்ச் அதாவது சர்வதேச மகளிர் தினமான அன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் தொடர் போராட்டமாக தொடர்ந்து வருகின்றது.

“இந்நிலையில், 2923 நாட்களை பூர்த்தி செய்கின்ற அந்த மார்ச் எட்டு சர்வதேச மகளிர் தினத்தன்றில் முல்லைதீவில் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராடத்தை மேற்கொண்டு வரும் தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தமது போராட்டத்திற்கு எந்த ஒரு அரசாங்கமும் தீர்வுகளை வழங்காத போது இந்த அரசாங்கமும் அதற்கான தீர்வை வழங்காத நிலையிலே சர்வதேசத்தினுடைய தீர்ப்பை  எதிர்பார்த்தவர்களாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே இந்த அரசாங்கம் ஆட்சி பொறுப்பெடுத்ததன் பின்னர் தாங்கள் செய்கின்ற மாபெரும் போராட்டமாக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அதனால், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவளித்து தமது உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தர அனைவரும் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...