Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நாட்டிலுள்ள சமூகப் பிரச்சினைகளுக்கு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களா காரணம்?

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2025 • 4:36 AM

நாட்டிலுள்ள சமூகப் பிரச்சினைகளுக்கு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களா காரணம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடசாலைக் கல்வியை முறையாகத் தொடரவில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
  • இது வெறும் பாடத்திட்ட மாற்றமாக இருக்கக் கூடாது.
  • இந்த சீர்திருத்தங்கள் முதற்கட்டமாக 2026ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் தொடங்கப்படும்.” “போட்டித் தேர்வுகளை இலக்காக்கும் கல்வி முறை நாடு எதிர்கொள்ளும் சமூக சவால்களுக்கு தீர்வல்ல.
எழுத்து அளவு:

பாடசாலைக் கல்வியை முறையாகத்  தொடரவில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சமூகத்தில் பேசப்படும் பல சமூகப் பிரச்சினைகள் இக்குழுவினாலேயே உருவாகின்றனவோ என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மாற்றங்கள் படிப்படியாகவும் நெகிழ்வான செயல்முறையாகவும் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கல்வி சீர்திருத்தங்களைச் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார்.

பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தொகுதி முறை அறிமுகம், சுயபடிப்பு, நடைமுறை செயல்கள், தனிப்பட்ட மதிப்பீடுகள், பாட பரீட்சை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றம், மாணவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்தேர்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்பதில் எவருக்கும் ஐயமில்லை. இது வெறும் பாடத்திட்ட மாற்றமாக இருக்கக் கூடாது. முழு கல்வி அமைப்பிலும் ஆழமான மாற்றம் தேவை. இந்த சீர்திருத்தங்கள் முதற்கட்டமாக 2026ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் தொடங்கப்படும்.”

“போட்டித் தேர்வுகளை இலக்காக்கும் கல்வி முறை நாடு எதிர்கொள்ளும் சமூக சவால்களுக்கு தீர்வல்ல. பதவி, பங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்குவதே நம் குறிக்கோள். அதனை அடைய புதிய மதிப்பீட்டு முறைகள் அமலாக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கல்வி மாற்றங்கள் எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், அமைச்சகம் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...