Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!

T

The Leader Desk

ஜூலை 1, 2025 • 5:28 AM

இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பப் பணியில் கலந்துகொண்ட போது, இது பற்றித் இதனைத் தெரிவித்தார்.
  • இதேவேளை, இலகுரக வாகனங்களுக்கு 2011ஆம் ஆண்டு முதல் சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், லொறிகள் மற்றும் பஸ்கள் சட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், இன்று முதல் பஸ் மற்றும் லொறி சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
  • இது சட்டத்தை அமுல்படுத்துவது மாத்திரம் அல்ல, விபத்துக்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அமைச்சர் கூறினார்.
எழுத்து அளவு:

செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பப் பணியில் கலந்துகொண்ட போது, இது பற்றித் இதனைத் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களினால் அதிகளவான உயிர்கள் பலியாதாகவும், அந்த நிலையை தவிர்க்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நெடுஞ்சாலைகளில் ஓடும் இலகுரக வாகனங்களில் பின் இருக்கையில் அமரும் பயணிகளும சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலகுரக வாகனங்களுக்கு 2011ஆம் ஆண்டு முதல் சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், லொறிகள் மற்றும் பஸ்கள் சட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், இன்று முதல் பஸ் மற்றும் லொறி சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது சட்டத்தை அமுல்படுத்துவது மாத்திரம் அல்ல, விபத்துக்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை பேருந்துகளின் சாரதிகள் பாதுகாப்பு ஆசன பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் பி.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் ஒக்டோபர் 1, 2011 முதல் நடைமுறையில் உள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டம் அறிவிக்கப்பட்டாலும், பல வாகன ஓட்டிகள் பாதுகாப்பு சீட் பெல்ட் அணியாததால், வீதி விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...