Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

T

The Leader Desk

ஜூன் 1, 2025 • 2:00 PM

சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சேர்ந்த இளம்யுவதி சினேகா பற்றிய செய்திகளும் காணொளிகளும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
  • அதில் குறிப்பிடப்பட்டுள்ளாவது, எனது மகள் கூறிய அனைத்தும் உண்மையே, நான் பாத்திரங்கள் கழுவி சம்பாதித்தே உழைத்து வருகின்றேன்.
  • https://www.facebook.com/100037509187400/videos/1026234953038497.
எழுத்து அளவு:

சேர்ந்த இளம்யுவதி சினேகா பற்றிய செய்திகளும் காணொளிகளும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

மலையகம் டயகம - அக்கரப்பத்தனை சேர்ந்த இளம்யுவதியான சினேகா தென்னிந்திய ஊடகமொன்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளார்.

இவரின் முதல் தெரிவுசுற்று பாடல் தொலைக்காட்சியில் வெளியானதிலிருந்தே இலங்கையிலிருந்து பலர் சார்பாக குறித்த யுவதியின் உடைகள் மற்றும் அவர் கூறிய கதைகள் என்பவற்றை விமர்சனத்திற்குட்படுத்தி வருகின்றன.

இதற்கு முன்னரும் இலங்கையை சேர்ந்த இருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலும், அவர்கள் ஈழத்தை சார்ந்தவர்கள் என்ற போர்வையில் அனுதாபம் தேடும் ஒரு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி மாறியிருந்தது.

இந்த விடயமும் பேசப்பட்டிருந்தாலும், மலையக இளம்யுவதி சினேகாவின் விவகாரமே பூதாகரமாக வெடித்துள்ளது.

அதற்கு காரணம் குறித்த இளம்யுவதி அணிந்திருந்த உடையும், அவர் நிகழ்ச்சியில் கூறிய காரணமுமாகும். ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற சீசனிலும் மலையகத்தை சேர்ந்த இளம்யுவதியொருவர் கலந்துக்கொண்டார்.

அவரின் திறமைகள் பேசப்படாமல், நிகழ்ச்சியின் TRP காக அனுதாபம் தேடும்படலாமாகவே அதுவும் மாறி முடிந்திருந்தது. தற்போது இந்த வருடம் மீண்டும் அதேபோல TRPக்காக மலையகத்தின் வறுமையையும், ஈழத்தின் வலியையும் விற்பதை போலுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த யுவதியின் தந்தை மற்றும தாயார் காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளாவது, எனது மகள் கூறிய அனைத்தும் உண்மையே, நான் பாத்திரங்கள் கழுவி சம்பாதித்தே உழைத்து வருகின்றேன். நாங்கள் இன்றும் தீப்பிடித்து கருகிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

இலங்கை நிகழச்சியில் எனது மகளுக்கு உடைகள் கொடுக்கப்பட்டன. ஒப்பனைகள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பெடுத்தார்கள். உணவுமே கொடுத்தார்கள். ஏன் பேருந்திற்கு கூட அவர்கள் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.

யுவதியின் தாயார் கூறுகையில், தனது மகள் அவளின் நண்பர்களிடம் உடையையே வாங்கி அணிந்து சென்றுள்ளார்.

தற்போதும் எங்கள் பிள்ளைகளிடம் நல்ல உடைகள் இல்லை. தயவுசெய்து எனது மகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலை, நாங்கள் பொய் கூறவில்லை. தவறாக கூற வேண்டாம் , மனவேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/100037509187400/videos/1026234953038497

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...