Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இன்று முதல் மழை குறையும்: 14 மாவட்டங்களில் 10,000 பேர் பாதிப்பு!

T

The Leader Desk

ஜூன் 1, 2025 • 5:07 AM

இன்று முதல் மழை குறையும்: 14 மாவட்டங்களில் 10,000 பேர் பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
  • இதேவேளை, நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
  • இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (01) நடவடிக்கை எடுத்தது.
எழுத்து அளவு:

எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (01) நடவடிக்கை எடுத்தது.

காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று மாலை 4 .00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக, அனர்த்தங்களால் காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, கனமழை மற்றும் காற்று காரணமாக நாடு முழுவதும் 55,940 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் பல ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மின்சாரம் வழங்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றும் பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...