Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கில் 5,940 ஏக்கர் நிலத்தை இரகசியமாகக் கபளீகரம் செய்துள்ள அரசாங்கம்!

T

The Leader Desk

மே 1, 2025 • 4:33 AM

வடக்கில் 5,940 ஏக்கர் நிலத்தை இரகசியமாகக் கபளீகரம் செய்துள்ள அரசாங்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின் பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆம் திகதிய 5620இலக்க வர் த்தமானி அறிவித்தல் மூலமே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்று இப்போது தெரியவந்துள்ளது.
  • இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 319 காணிகளை உள்ளடக்கி 3 ஆயிரத்து 669 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 507 காணிகளை உள்ளடக்கி ஆயிரத்து 702 ஏக்கரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 58 காணிகளை உள்ளடக்கி 515 ஏக்கரும் என மொத்தம் 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுகின்றது.
  • இவ்வாறு அரச உடமை என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலப்பரப்பில் பலரது வீடுகள், பொது இடங்கள், ஆலயங்கள் மட்டுமன்றி பல தொழில் முயற்சி மையங்களும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.
எழுத்து அளவு:

கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின் பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

2025.03.28 ஆம் திகதிய 5620இலக்க வர் த்தமானி அறிவித்தல் மூலமே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்று இப்போது தெரியவந்துள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 319 காணிகளை உள்ளடக்கி 3 ஆயிரத்து 669 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 507 காணிகளை உள்ளடக்கி ஆயிரத்து 702 ஏக்கரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 58 காணிகளை உள்ளடக்கி 515 ஏக்கரும் என மொத்தம் 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுகின்றது.

இவ்வாறு அரச உடமை என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலப்பரப்பில் பலரது வீடுகள், பொது இடங்கள், ஆலயங்கள் மட்டுமன்றி பல தொழில் முயற்சி மையங்களும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.

யாழ். குடாநாட்டின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளின் கடற்கரையோரங்கள்வழி யாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வரை இந்தப் பிரதேசங்கள் நீள்கின்றன.

இந்தப் பிரதேசங்களில் உள்ள நிலங்களில் அரச நிலம் எது, தனியார் நிலம் எது எனப் பிரதேச செயலகங்களுக்கோ அல்லது மாவட்ட செயலகங்களுக்கோ அடையாளம் தெரியாத காரணத்தாலேயே இவ்வாறான அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் - மூன்று மாத காலப் பகுதிக்குள் தமது காணி என்று தனியார் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த நிலங்களை விடுவித்து ஏனைய நிலங்கள் அரச நிலம் என 3 மாத நிறைவில் மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும் என அந்தப் பகுதிகளின் பகுதி பிரதேச செயலாளர்கள் பதிலளிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கின்றமையாலோ அல்லது உயிரிழந்திருக்கின்றமையாலோ அந்த நிலங்களுக்கு உரிய காலத்தில் உரிமை கோராவிடின் அவ்வாறான நிலங்களையும் பொதுப் பயன்பாட்டு நிலங்களையும் அரச நிலங்களாக்கும் முயற்சியாகவே இது கருதப்படுவதாக அந்தப் பகுதிகளின் நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அரச காணிகளாகச் சுவீகரித்து பிற நாடு ஒன்றுக்கு வழங்க முயற்சி இடம்பெறுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது அவ்வாறு எந்த முயற்சியும் இல்லைஎன அரசும் அதிகாரிகளும் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- முரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...