Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

யாழ். பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2025 • 2:24 PM

யாழ். பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம்.
எழுத்து அளவு:

உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம். சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ். பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை! | Tamil Leader | We Lead the Nation