Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மதுபான போத்தல்கள் தொடர்பில் புதிய நடைமுறை!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2025 • 4:19 AM

மதுபான போத்தல்கள் தொடர்பில் புதிய நடைமுறை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல்.
  • அனைத்து மதுபான தயாரிப்பாளர்களும் மதுபான போத்தல்களின் மூடியின் கீழும் ஒட்டப்பட்ட லேபிளின் மேலும் உற்பத்தி திகதியை அச்சிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உதயகுமார பெரேரா அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான தயாரிப்பாளர்களும் மதுபான போத்தல்களின் மூடியின் கீழும் ஒட்டப்பட்ட லேபிளின் மேலும் உற்பத்தி திகதியை அச்சிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டிக்கர் தொடர்பாக நம்பிக்கையில்லா நிலைமையே இந்த புதிய நடைமுறை மூலம் வெளிப்படுவதாக மதுவரித் திணைக்கள தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெருந்தொகை அந்நிய செலாவணியை செலவிட்டு பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் போத்தல்களில் உற்பத்தி திகதியை அச்சிடுமாறு பணிப்புரை விடுத்துள்ளமை பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அடையாள முறைமையை மீறுவதற்கு மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு உரிமை கிடையாது என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பு திகதியைக் அச்சிடுவதற்கு, மதுபான உற்பத்தியாளர்கள் அதிகளவு செலவிட நேரிடும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...