Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தமிழ் ஊடகர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

T

The Leader Desk

மார்ச் 1, 2025 • 5:13 PM

தமிழ் ஊடகர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை (28 ) தெரிவித்தார்.
  • அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவதானமாக கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் , இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பிலான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை (28 ) தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் , ஊடகத் தொழிலை செய்யும்போது அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் , இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்காக நவீன ஊடக பயிற்சிகள் , ஊடகத் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவதானமாக கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் , இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பிலான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார்.

பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்கள் மீதான அடக்குமுறைகள் , விசாரணை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அழுத்தம் , செய்திகள் எழுதுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த சந்திப்பில் விபரமாக குறிப்பிட்டதுடன் மட்டக்களப்பு ,கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் மற்றும் மலையகப்பகுதிகளில் ஊடகர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் எடுத்துரைத்தது.அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராஜதந்திர மட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய தலையீடுகளையும் ஒன்றியம் இதன்போது சுட்டிக்காட்டியது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வீட்டு வசதிகளை செய்வது குறித்தான யோசனையொன்றும் ஒன்றியத்தால் தூதுவரிடம் முன்வைக்கப்பட்டது .அதேபோல் தமிழ் ஊடகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ,பிரச்சினைகள் குறித்து விரிவான மகஜர் ஒன்றும் இந்த சந்திப்பின்போது உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...