Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

15 நிமிடங்களில் 08 kg தேயிலைக் கொழுந்து பறித்து சாதனை படைத்த ராஜலெட்சுமி!

T

The Leader Desk

மார்ச் 1, 2025 • 5:03 PM

15 நிமிடங்களில் 08 kg தேயிலைக் கொழுந்து பறித்து சாதனை படைத்த ராஜலெட்சுமி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். இவருக்கு தங்கப் பதக்கத்துடன் 650,000 ரூபாய் ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
  • கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின், கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.
  • இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
எழுத்து அளவு:

தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். 

இவருக்கு தங்கப் பதக்கத்துடன் 650,000 ரூபாய் ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01) ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பண்டித்த கே மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின், கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இற்றேரத்தில் தரமுள்ள  அதிக கிலோ கொழுந்தை பறிப்பவர்களுக்கே முதல் 3 இடங்கள் வழங்கப்பட்டன.

அதற்கமைய 3 பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்தும் வெண்கல பதக்கத்தை பெற்று 3 ஆம் இடத்தை, கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. மாரியாய்,  தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வீரையா வனிதா மற்றும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் P. சந்ரலேகாவும் பெற்றுக் கொண்டனர்.

அத்தோடு வெள்ளி பதக்கத்தை பெற்று 2ஆம் இடத்தை,  களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின்  சுப்பிரமணியம் கோமதி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின்  தர்மலிங்கம் பூமணி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் K. கவிதா பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை , கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. இந்திராகாந்தி,தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் எந்தனி இரேஷா ராஜலெட்சுமி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின்  சுகுமாறன் ராஜலெட்சுமி பெற்றுக் கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...