Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எதற்காக இந்த எரிபொருள் வரிசை: உண்மையில் நடந்தது என்ன?

T

The Leader Desk

மார்ச் 1, 2025 • 8:29 AM

எதற்காக இந்த எரிபொருள் வரிசை: உண்மையில் நடந்தது என்ன?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
  • எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
  • இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
  • அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து செய்வதற்கும், புதிய சூத்திரம் மூலம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்தது.
எழுத்து அளவு:

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து செய்வதற்கும், புதிய சூத்திரம் மூலம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்தது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று (28) முதல் எரிபொருளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறியது.

இருப்பினும், இந்த முடிவு நாட்டில் எந்த எரிபொருள் நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெறும் கொடுப்பனவை அதிகரிக்கும் அதன் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், "முதல் 15 லோடிங்கிற்கு 6.96 ரூபா கொடுக்கப்படும். அடுத்த 15 லோடிங்கிற்கு 6.62 ரூபாய வழங்கப்படும். இப்போது சுமார் 25 லோடிங்களை செய்பவர்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் தற்போது சுமார் 1 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுகின்றனர். அதில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பிறகு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்."

"நாம் அறிமுகப்படுத்தும் முறைமையின் ஊடாக , 25 லோடிங் செய்பவர்களுக்கு 6.69 ரூபா கிடைக்கும். "அப்போது அவர்களுக்கு 113,850 கிடைக்கும்." பழைய முறையை விட அதிகளவான வருமானமே இதில் கிடைக்கிறது" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எதற்காக இந்த எரிபொருள் வரிசை: உண்மையில் நடந்தது என்ன? | Tamil Leader | We Lead the Nation