Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் வலை விரிப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2025 • 6:39 AM

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் வலை விரிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
  • ஏனைய மூன்று வழக்குகள் தொடர்பிலும் துரிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • மாவட்ட நீதிமன்றங்களில் 33,000க்கும் அதிகமான காணி வழக்குகள் இருப்பதாக, அமைச்சரின் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இதன்படி, முன்பு நடைபெற்ற ஊழல், மோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விடயங்கள் தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டு, பின்னர் விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினொரு வழக்குகளையே மீண்டும் முன்னெடுக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நான்கு வழக்குகளின் விசாரணைகளை நிறைவு செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நான்கு வழக்குகள் தொடர்பான கோப்புகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்று வழக்குகள் தொடர்பிலும் துரிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்குகள் தொடர்பில் முன்னைய அரசின் ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் நிலுவையில் உள்ள நில வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான புதிய திட்டத்தை தொடங்க நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களில் 33,000க்கும் அதிகமான காணி வழக்குகள் இருப்பதாக, அமைச்சரின் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.

பல தரப்பினரின் பங்கேற்புடன் இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் வலை விரிப்பு! | Tamil Leader | We Lead the Nation