இந்த வருடத்தில் நாட்டில் இடம்பெற்ற 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால்
நடத்தப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஃப்ரெட்ரிக் வூட்லர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த 68 துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் விளைவாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் 150 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், 23 டி-56 ரக துப்பாக்கிகள், 46 கைத்துப்பாக்கிகள் மற்றும் 30 ரிவால்வர்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.