சீதாவகபுர நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.
இன்று (15) சீதாவகபுர நகர சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான சுனில் ஜயரத்ன தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேவேளை, பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.