Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

குருவி பறந்தது.. ட்விட்டர் பெயரை 'X' என மாற்றிய எலான் மஸ்க்

T

The Leader Desk

ஜூலை 25, 2023 • 3:27 AM

குருவி பறந்தது.. ட்விட்டர் பெயரை 'X' என மாற்றிய எலான் மஸ்க்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விரும்பிய எலான் மஸ்க், என்ன பெயரை வைக்கலாம் அல்லது என்ன மாற்றம் செய்யலாம் என்று டிவிட்டர் பயனர்களிடம் கருத்து கேட்டார்.
  • இதேபோன்று x.com என்ற இணைய தள முகவரிக்குள் நுழைந்தால் அது நேரடியாக ட்விட்டருக்கு செல்கிறது.
  • அதில் நபர் ஒருவர் எக்ஸ் என்ற எழுத்து மட்டும் மாற்றினால் போதும் என்று பதிவிட்டார்.
எழுத்து அளவு:

விரும்பிய எலான் மஸ்க், என்ன பெயரை வைக்கலாம் அல்லது என்ன மாற்றம் செய்யலாம் என்று டிவிட்டர் பயனர்களிடம் கருத்து கேட்டார்.

அதில் நபர் ஒருவர் எக்ஸ் என்ற எழுத்து மட்டும் மாற்றினால் போதும் என்று பதிவிட்டார். இது மஸ்குக்கு பிடித்துப் போகவே , டிவிட்டர் கணக்குகளில் நீல நிற டிக் வசதிக்கு அருகில் இருக்கும் குருவி பட இலச்சினைக்கு பதில் எக்ஸ் என்ற எழுத்து மாற்றப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்துக்கு என பிரத்யேகமாக உள்ள பக்கத்திலும் டிவிட்டர் என்ற வார்த்தைக்கு பதிலாக x என்று மாற்றப்பட்டது. மேலும் எக்ஸ் என்ற எழுத்து டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்தின் மீது ஒளிரவிடப்பட்டது. இதேபோன்று x.com என்ற இணைய தள முகவரிக்குள் நுழைந்தால் அது நேரடியாக ட்விட்டருக்கு செல்கிறது.

ட்விட்டர் தளத்தை உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் கைப்பற்றிய பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்ற முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார். தற்போது லோகோவை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் எலோன் மஸ்க்.

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி நடைமுறைக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் அதிகமானோரை த்ரெட்ஸ் ஈர்த்தாலும், தற்போது த்ரெட்ஸ் சற்று தொய்வை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குருவி பறந்தது.. ட்விட்டர் பெயரை 'X' என மாற்றிய எலான் மஸ்க் | Tamil Leader | We Lead the Nation